இலங்கையில் மின்னல் வேகத்தில் பரவிவரும் ஒமிக்ரோன்!
இலங்கையில் இப்பொழுது கொரோனா தொற்றின் திரிபான ஒமிக்ரோன் மிக வேகத்தில் பரவி வருவதாக கூறப்படுகிறது.
இப்பொழுது வரை ஒமிக்ரோன் தொற்றாள் 32பேர் வரை பாதிக்கப்பட்டு உள்ளதாக கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்தோடு டெல்டா வைரஸ் தொற்றினால் 23பேரும் ஆல்பா தொற்றால் 8 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளதாக வைத்தியர் ஜூட் ஜயமஹா தெரிவித்துள்ளார்.
இதே சமயம் ஒமிக்ரோன் வைரஸ் தொற்றுக்கு எதிராக பூஸ்டர் தடுப்பூசி பலன் அளிக்கவில்லை என பொய்யான தகவல் பரவி வருவதாகவும் ஜூட் ஜயமஹா தெரிவித்துள்ளார்.