ஜீவன் தொண்டமானை கண்டதும் கைது செய்ய உத்தரவு
தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் நீர் போக்குவரத்து அமைச்சருமான ஜீவன் தொண்டமானை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நுவரெலியா நீதிமன்று பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மே 30 ஆம் திகதி நுவரெலியா பீட்ரூ தோட்ட தொழிற்சாலைக்குள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் பலவந்தமாக உள்நுழைந்த சம்பவம் தொடர்பிலேயே நுவரெலியா பொலிஸார் நீதிமன்றத்தில் விளக்கங்களை முன்வைத்தனர்.
அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட சந்தேகநபர்களை நீதிமன்றில் இன்று திங்கட்கிழமை முன்னிலையாகுமாறு பொலிஸார் ஜீவனுக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்த நிலையில், எவரும் நீதிமன்றில் ஆஜராகாவில்லை.
இந்நிலையில் ஜீவன் தொண்டமானை கைது செய்து முற்படுத்துமாறு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.