வித்தியா கொலை குற்றவாளி ஒருவர் கண்டியில் மரணம்!!
யாழ்ப்பாணம் புங்குடுதீவு பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியாவை கூட்டு வன்புணர்வு படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட புங்குடுதீவு பகுதியை சேர்ந்த 37 வயதுடைய பூபாலசிங்கம் தவகுமார் செந்தில் என்பவர் உயிரிழந்துள்ளார்.
பல்லேகல தும்பர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட சந்தேகநபர் கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதி செய்துள்ளது.
நிமோனியாவால் பாதிக்கப்பட்ட நிலையில் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிறிது நேரத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை தொடர்பில் மேல்முறையீடு செய்த நிலையில், அது குறித்து ஆராயப்பட்டு வருகின்ற நிலையிலேயே உயிரிழதுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.