யாழ்ப்பாணத்தில் விபத்தில் ஒருவர் பலி, சாரதி தப்பி ஓட்டம்!
யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் நேற்று புதன்கிழமை (08) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் வட்டுக்கோட்டையை சேர்ந்த 60 வயதுடையவர் உயிரிழந்துள்ளார்.
புத்தூரில் இருந்து சுன்னாகம் நோக்கி பயணித்த வாகனம் பலாலிலிருந்து ஏழாலை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து இடம்பெற்ற பின்னர் வாகன சாரதி தப்பி சென்றுள்ள நிலையில், விபத்து தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.