யாழ்ப்பாணத்தில் விபத்தில் ஒருவர் பலி, சாரதி தப்பி ஓட்டம்!

யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் நேற்று (08) புதன்கிழமை இடம்பெற்ற விபத்தில் 60 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்தவராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விபத்து புத்தூர் அருகில் இருந்து சுன்னாகம் நோக்கி சென்ற வாகனம், பலாலி பகுதியிலிருந்து ஏழாலை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதி ஏற்பட்டுள்ளது.
விபத்துக்குப் பிறகு, வாகனத்தின் சாரதி சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.