கொரோனா தொற்றால் யாழ்ப்பாணத்தில் ஒருவர் பலி
யாழ்ப்பாணத்தில் நீண்ட காலத்தின் பின்கொரோனோ தொற்றினால் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
பிரான்ஸ் நாட்டில் இருந்து சிகிச்சைக்காக வந்த 62 வயது பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் வட்டுக்கோட்டை அராலியில் தங்கியிருந்த நிலையில் காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு நாள்கள் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார்.
உயிரிழப்பின் நடாத்தப்பட்ட பரிசோதனையில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டது.