யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் மூளை காய்சலால் ஒருவர் மரணம்!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வந்த மன்னார் பள்ளிமுனை பகுதியை சேர்ந்த 49வயதுடைய ஜோன் திரவியம் குமரசேன் என்பவர்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை(20) திகதி காய்ச்சல் காரணமாக மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைக்காக மறுநாள் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில் யாழ் ]போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் , நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மூளை காய்ச்சல் காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.