இரணைமடு குளத்தின் வான் கதவுகள் திறப்பு

இன்று (01) இரணைமடு குளத்தின் நான்கு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
தற்போது நிலவும் தொடர்ச்சியான மழையால், குளத்தில் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், கூடுதல் நீரை வெளியேற்றும் நடவடிக்கையாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால், குளத்தின் கீழ்ப்பகுதியில் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.