பாஸ்போர்ட்: மேலும் 50 பிராந்திய மையங்கள்
கடவுச்சீட்டுகளை வழங்குவதற்காக 50 பிராந்திய மையங்களை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் தெரிவித்துள்ளார்.
தற்போது வவுனியா, குருநாகல், மாத்தறை மற்றும் கண்டி ஆகிய நான்கு பிராந்திய அலுவலகங்களில் கொழும்பில் உள்ள தலைமை அலுவலகம் தவிர கடவுச்சீட்டு வழங்கும் பணியை மேற்கொள்வதாகவும், கடவுச்சீட்டு வழங்கும் பணியை வினைத்திறனாக்க பிரதேச செயலகங்களில் மேலும் 50 புதிய நிலையங்கள் ஸ்தாபிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
எந்தவொரு விண்ணப்பதாரரும் இந்த அலுவலகத்திற்குச் சென்று தேவையான தகவல்களையும், புகைப்படத்தையும் கொடுத்து, கடவுச்சீட்டை அவர்களின் வீட்டு வாசலில் பெற்றுக்கொள்ளலாம்.
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படக்கூடிய வகையில் இலத்திரனியல் சிப் கொண்ட மின் கடவுச்சீட்டை அறிமுகப்படுத்தவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.