பிக்மீக்கு எதிராக யாழில் ஆட்டோக்காரர்கள் பெரும் போராட்டத்திற்கு ஏற்பாடு!
யாழ்ப்பாணத்தில் வரும் புதன்கிழமை முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் பெரும் போராட்டத்தினை செய்யவுள்ளதாக யாழ் மாவட்ட முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாண நெடுந்தூர இடங்களுக்கான பேரூந்து நிலையத்திலிருந்து ஆரம்பமாகும் பேரணி யாழ் நகர வீதிகளின் ஊடாக வந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் மகஜர் ஒன்றினையும் கையளிக்கவுள்ளனர்.
அண்மைய நாட்களில் யாழில் அறிமுகமான பிக்மீ செயலியை மக்கள் பயன்படுத்தி வருவதனால் நீண்ட காலமாக முச்சக்கர வண்டியினை வாழ்வாதாரமாக கொண்டு செயல்படுபவர்பவர்கள் பெரும் பாதிப்பினை எதிர்கொண்டுள்ளமையினால் இந்த போராட்டமானது முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் முன்னெடுக்கப்படவுள்ளது.