சர்வதேச பல்கலைக்கழகம் அமைக்க ஜனாதிபதி யோசனை!

ஆசிய அபிவிருத்தி வங்கியின் அனுசரணையுடன் இலங்கையில் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகமொன்றை ஸ்தாபிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்மொழிந்துள்ளார். இதன் மூலம் உலகில் எந்த நாட்டிலும் மாணவர்கள் கல்வி கற்க முடியும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகாவாவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (30) காலை மணிலாவிலுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைமையகத்தில் இடம்பெற்றதுடன், இது தொடர்பில் ஜனாதிபதி கவனத்திற்கு கொண்டு வந்தார்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைமையகத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் வரவேற்றார்.

கடந்த காலங்களில் ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு வழங்கிய அவசர உதவிக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க, இலங்கைக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடினார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம், இலங்கையுடன் தொடர்ந்து ஒத்துழைப்பதாக தலைவர் உறுதியளித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கையின் செயற்பாடுகள் தொடர்பிலும் ஜனாதிபதி ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவருக்கு விளக்கமளித்தார்.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆசிய அபிவிருத்தி வங்கியில் பணியாற்றும் நிபுணர்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.