இலங்கைக்கு முன்னுரிமை வழங்கப்படும் – ஜப்பான் அறிவிப்பு

(LBC Tamil) கடன் நெருக்கடியை எதிர்நோக்கும் நாடுகளுக்கு உதவுவதில் இலங்கைக்கு முன்னுரிமை வழங்கப்படுமென ஜப்பானின் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதி நிதி அமைச்சர் மசாடோ கனிடா தெரிவித்துள்ளார்.

ரொய்டர்ஸ் செய்தி சேவைக்கு வழங்கியுள்ள விசேட செவ்வியின் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அத்தோடு, நடுத்தர வருவாய் நாடுகளின் கடன் நெருக்கடிக்கு சர்வதேச தீர்வு இருக்க வேண்டும் எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

அத்தகைய நடவடிக்கைகளுக்காக ஜப்பான் பாரிஸ் கிளப் மற்றும் சர்வதேச நாணய நிதியம் போன்ற சர்வதேச அமைப்புகளுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பைப் பேணுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.