திருகோணமலையில் தேநீர் கடைக்கு பின் விபச்சார விடுதி, உரிமையாளரும் இரு பெண்களும் கைது

திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 97சந்தி கல்மெடியாவ தெற்கு பகுதியில் விபசார விடுதி ஒன்று காவல்துறையினரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று (02) மாலை இடம் பெற்றுள்ளது. சிறிய தேநீர் கடை நடாத்தி வந்த உரிமையாளர் தனது கடைக்கு பின் உள்ள வீட்டில் விபசார விடுதியை நடாத்தி வருவதாக காவல்துறையினருக்கு இரகசிய தகவலின் கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில் திடீர் சுற்றி வளைப்பினை மேற்கொண்ட காவல்துறையினர் கண்டி, இரத்தினபுரி பகுதியை சேர்ந்த (44,45) வயது  இரு பெண்களும் வீட்டு உரிமையாளரும் (வயது 38) கைது செய்யப்பட்டனர்.

நீண்ட காலமாக இந்த விபச்சார விடுதி நடாத்தப்பட்டு வந்துள்ளது. கைது செய்யப்பட்ட இரு பெண்கள் உட்பட உரிமையாளரையும் தம்பலகாமம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான விசாரனைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.