QR குறியீட்டுடனான சாரதி அனுமதிப்பத்திரத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை
(LBC Tamil)
Colombo (News 1st) QR குறியீட்டுடனான சாரதி அனுமதிப்பத்திரத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போது பயன்படுத்தப்படும் சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்கும் போது, QR குறியீட்டுடனான புதிய சாரதி அனுமதிப்பத்திரம் விநியோகிக்கப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் குசலானி டி சில்வா குறிப்பிட்டார்.
வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமையால், கடந்த வருடத்தில் வாகனங்களை பதிவு செய்யும் நடவடிக்கை குறைவடைந்துள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் கூறியுள்ளார்.