சிறுவர் பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு வேப்பவெட்டுவானில் பேரணி

‘சிறுவர்களை பாதுகாப்போம் – வளமிக்க சமூதாயத்தை உருவாக்குவோம்’ என்ற தொனிப்பொருளில் மெதடிஸ்த திருச்சபை செங்கலடி சேகரத்தின் வானவில் சிறுவர் அபிவிருத்தி திட்டம் இன்று (03) வேப்பவெட்டுவானில் விழிப்புணர்வு பேரணியை நடத்தியது.
“சிறுவர் துஷ்பிரயோகத்தை ஒருபோதும் ஏற்க முடியாது” என்ற கோஷத்துடன் இலுப்படிச்சேனை மைதானத்திலிருந்து சந்தி வரை நடைபெற்ற இப்பேரணியில், சிறுவர் பாதுகாப்பு குறித்த பதாதைகள், குறும்படங்கள் மற்றும் பாடல்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்வில் பெற்றோர்கள், சமூதாய பிரதிநிதிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் பங்கேற்றனர்.