ரணில் – பஸில் முக்கிய பேச்சு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்சவிற்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நாட்டின் தற்போதைய நிலைமை, அரசமைப்பு மற்றும் பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கல்ந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஸில் ராஜபக்ச நாட்டுக்கு வந்ததன் பின்னர் ஜனாதிபதியைச் சந்திப்பது இதுவே முதல் தடவை என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இருவருக்கும் இடையில் மாத்திரம் நேற்று நடைபெற்ற இந்தக் கலந்துரையாடல் ஒன்றரை மணித்தியாலங்களுக்கு மேல் நீடித்தது என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.