வடக்கின் பொருளாதார சர்வதேச நுழைவாயில் மீள திறப்பு– அமைச்சர் டக்ளஸ் மகிழ்ச்சி

தொடர்ச்சியான பல்வேறு முயற்சிகளின் பலனாக மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள பலாலிக்கான விமான சேவையை மக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வடக்கு மாகாண மக்களுக்கு மாத்திரமன்றி கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களும் நன்மை பயக்கவுள்ளதாகவும்  கடற்றொழில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,

அடிப்படையான வசதிகளுடன் மட்டுப்படுத்தப்பட்டளவில் சேவைகள் தற்போது ஆரம்பமாகியுள்ள நிலையில் விமான நிலைய உட்கட்டமைப்பு வசதிகள் கட்டம் கட்டமாக விஸ்தரிக்கும் நகர்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதுதொடர்பாக, இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடுவதுடன் அமைச்சரவையிலும் பிரஸ்தாபிக்கவுள்ளேன்.

இந்நிலையில், மக்கள் சரியான முறையில் இதனைப்  பயன்படுத்துவார்களாயின், எதிர்காலத்தில் இந்தியாவிற்கான சேவைகள் விரிவுபடுத்தப்படும் என்பதுடன் ஏனைய நாடுகளில் இருந்தும் சேவையை முனனெடுப்பதற்கும் விமான நிறுவனங்கள் முன்வரும்.

இதன்மூலம், எமது பிரதேசத்தின் சுற்றாலாத்துறை வளர்ச்சியடைவதுடன் , ஏற்றுமதி இறக்குமதி செயற்பாடுகளுக்கான நேரடி வாசலாகவும் பலாலி விமான நிலையம் செயற்படும்.

இது எமது மக்களை பொருளாதார ரீதியில் வலுப்படுத்தும்”. அத்தோடு, காங்கேசன்துறைக்கும் பாண்டிச்சேரி மற்றும் காரைக்கால் போன்றவற்றிற்கு இடையிலான சரக்கு படகு சேவையை ஆரம்பிக்கும் எனது முயற்சிகளும் விரைவில் சாத்தியமாகும் என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.