தரம் 5, A/L வகுப்புக்களை இடைநிறுத்த தீர்மானம்!
தரம் 5 புலமைபரிசில், கபொத உயரத்தர பரீட்சைகள் நடைபெறவுள்ளதால் அதனோடு தொடர்புபட்ட அனைத்து மேலதிக வகுப்புகளையும் மற்றும் கருத்தரங்குகள் இதனோடு தொடர்புபட்ட ஏனைய நடவடிக்கைகளை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில், ஜனவரி 18ம் திகதி நள்ளிரவிற்கு பின் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிகவகுப்புகள், கருத்தரங்குகள், தொடர்புடைய ஏனைய நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படுமென தெரிவித்தார்.
அதேபோல, கபொத உயரத்தர பரீட்சைக்கான மேலதிக வகுப்புக்கள், கருத்தரங்குகள் பெப்ரவரி 1ம் திகதி தொடக்கம் பரீட்சை நிறைவடையும் வரை இடைநிறுத்தப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.