சங்கானை விபத்து – பெண் பலி, ஹயஸ் சாரதி தப்பி ஓட்டம்
யாழ் மானிப்பாய் பகுதியில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற விபத்தில் தாய் சம்பவ இடத்தில் பலியாகிய நிலையில் படுகாயமடைந்த மகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மானிப்பாய், கட்டுடை பகுதியில் இடம்பெற்ற இந்த விபத்தில் சங்கானை பகுதியை சேர்ந்த முகுந்தன் அஜந்தா எனும் பெண் உயிரிழந்துள்ளார்.
வேகமாக வந்த ஹயஸ் ரக வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளில் பயணித்த தாயையும் மகளையும் மோதியதில் தாய் சம்பவ இடத்தில் பலியானார்.
விபத்தை அடுத்து வாகன சாரதியும் மற்றுமொரு நபரும் தப்பியோடிய நிலையில் ஹயஸ் வாகனத்தில் இருந்த இரு இளைஞர்களை பொலிஸார் கைது செய்தனர்.
வாகனத்தில் வந்தவர்கள் மதுபோதையில் இருந்ததாகவும் , வாகன சாரதியை விரைவாக கைது செய்ய வேண்டும் என பொலிஸாருடன் மக்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், விபத்துக்கு உள்ளான மோட்டார் சைக்கிள் மற்றும் ஹயஸ் வாகனத்தினை காவல்துறையினர் காவல்நிலையத்திற்கு எடுத்து சென்றதுடன் . கைது செய்யப்பட்ட இருவரையும் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
தப்பியோடிய வாகன சாரதியையும் மற்றைய நபரையும் கைது செய்வதற்கான நடவடிகையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.