பாடசாலை மாணவியின் வீடியோ விவகாரம், மூவர் கைது
17 வயது பாடசாலை மாணவியின் வீடியோ காட்சிகளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட மூவர் மொனராகலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 20, 23 மற்றும் 24 வயதுகளை உடைய மொனராகலை, பண்டாரவாடிய, பட்டியாலந்த, மகந்தனமுல்ல ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களென தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வீடியோவை பாடசாலை மாணவியின் காதலன் தனது நண்பர்களுக்கு வழங்கியதாகவும் பின் அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளதாகவும் தெரியவருகிறது.
இது தொடர்பான மொனராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன்னர் யாழ். வலிகாமம் வலயத்துக்குட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 15 வயது மாணவியின் வீடியோ உரையாடலை வைத்து மிரட்டி, மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.