கொலைக் குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பாடசாலை மாணவர் O/L பரீட்சையில் தப்பி ஓட்டம்

க.பொ.த.சாதாரண தர பரீட்சையின் போது பரீட்சைக்கு தோற்றிய நிலையில், கொலை செய்த மற்றும் கைக்குண்டு வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த பாடசாலை மாணவர் ஒருவர் அதிகாரிகளிடமிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் பாடசாலை மாணவர் மாகொலவில் உள்ள ஆண்களுக்கான நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தில் வைக்கப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் இறுதிப் பரீட்சைக்கு தோற்றுவதற்காக சிறைச்சாலை அதிகாரிகளினால் குறித்த சிறுவன் பரீட்சை நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

இந்நிலையில் சிறுவன் கழிவறைக்கு செல்வதற்கு அனுமதி கேட்டுள்ளார், பின்னர் அவர் அருகிலுள்ள கழிவறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார், அங்கு அவர் தன்னுடன் வந்த சிறை அதிகாரியைத் தள்ளிவிட்டு தப்பி ஓடியுள்ளார்.

இது தொடர்பில் சபுகஸ்கந்த பொலிஸார் சிறுவனை கைது செய்வதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.