பழுதடைந்த இறைச்சியை Offer இல் விற்பனை செய்த KFC க்கு சீல்!
பழைய இறைச்சிகளை வாடிக்கையாளருக்கு Offer இல் விற்பனை செய்தமையினால் KFCயின் ராஜகிரிய கிளைக்கு, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற சலுகையில் பழுதடைந்த கோழி இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த முறைப்பாட்டையடுத்து இராஜகிரியவில் உள்ள KFC விற்பனை நிலையத்தில், பொது சுகாதார பரிசோதகர்களால் அங்கிருந்த கோழி இறைச்சிகள் அழிக்கப்பட்டது.
இது தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் கூறுகையில், தாம் உட்கொள்ளும் KFC கோழியில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக வாடிக்கையாளர் ஒருவரிடம் இருந்து முறைப்பாடு வந்திருந்தது.
இதனை அடுத்து, PHIக்கள் விற்பனை நிலையத்திற்கு விரைந்து சென்று பழுதடைந்ததாக நம்பப்படும் கோழி இறைச்சியினை அப்புறப்படுத்தினர்.
அத்துடன், மேலதிக விசாரணைகளுக்காக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு கோழியின் மாதிரி அனுப்பப்பட்டுள்ளதாவும் அதன் முடிவுகளை வெளியிட குறைந்தது 10 நாட்கள் ஆகலாம் எனவும் ராஜகிரிய KFCயை சோதனையிட்ட PHI அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரபல நிறுவனத்தினமான KFC Sri Lanka அழுகிய கோழியை விற்றமைக்காக பலர் சமூக ஊடகங்களில் சீற்றத்தை வெளிப்படுத்தி வருகின்றனர் .