முல்லையில் குடியேறும் சிவன் : பீதியில் சிங்கள இனவாதிகள்
முல்லைத்தீவு, பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் இன்று புதன்கிழமை (24) இடம்பெற்றது. இந்நிலையில் பூசகர் உள்ளிட்ட பக்தர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை (23) அன்று கோவிலுக்கு சென்றிருந்த காவல்துறை இராணுவம் மற்றும் தொல்பொருள் திணைக்களத்தினரால் கோவில் பணிக்காக வருகை தந்த பூசாரி உள்ளிட்டவர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது .
சிவன் சிலையை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் பிரதிஸ்டை செய்யவுள்ளதாகவும் அது பல கோடி பெறுமதி எனவும் சிங்கள இனவாதிகள் ஒரு வதந்தி கதையினை பரப்பியுள்ளார்கள்.
எந்த புதிய சிலையும் பிரதிஸ்டை செய்யமாட்டோம். தயவுசெய்து வதந்தியை நம்ப வேண்டாம் என ஆலய பூசகர் தெரியப்படுத்தியிருந்தார்.
எனினும் புதிய சிவலிங்க பிரதிஸ்டை தொடர்பில் தென்பகுதியை சேர்ந்த பல சிங்கள இனவாதிகள் முகநூலில் வதந்தி பரப்பியுள்ளனர்.