மட்டக்களப்பில் மாமியாரை கொலை செய்துவிட்டு மருமகன் தலைமறைவு!
மட்டக்களப்பு வாழைச்சேனை வாகனேரி பிரதேசத்தில் மருமகன் மாமியாரை அடித்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய சம்பவம் நேற்று (23) இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதில் வாகனேரி கூளையடிச்சேனையை சேர்ந்த வைரமுத்து கோமதனி (45 வயது) என்பவரே உயிரிழந்தார்.
உயிரிழந்தவரின் மகள் திருமணம் முடித்து இரு குழந்தைகள் உள்ள நிலையில் வெளிநாடு ஒன்றிற்கு தொழில் வாய்பிற்காக சென்றுள்ளார்.
இந்நிலையில் மாமியாருடன், மருமகனும் இரு குழந்தைகளும் வாழ்ந்து வருகின்றனர்.
நேற்று இரவு மது போதையில் வந்த மருமகனுக்கும் மாமியாருக்கும் இடையே சண்டை ஏற்பட்டபோது, மாமியாரின் தலை மீது பாரிய பொருள் ஒன்றால் மருமகன் தாக்கியதை அடுத்து மாமியார் உயிரிழந்துள்ளார்.
பின், 30 வயது மருமகன் அங்கிருந்து தலைமறைவாகினார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.