பண்டிகை காலத்தில் நாட்டில் விசேட பாதுகாப்பு!!
எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு வேலை திட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தெரிவிக்கையில் ”குறித்த பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக பதில் பொலிஸ் மா அதிபர் ஏற்கனவே இரண்டு விசேட சுற்று நிருபங்களை வெளியிட்டுள்ளார்.
இதன்படி பொதுமக்கள் அதிகளவில் நடமாடும் பகுதிகளில் சிவில் உடையணிந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.