லண்டனில் சனத் தலைமையில் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு நிகழ்வு
இலங்கை சுற்றுலாத் தூதுவரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான சனத் ஜயசூரிய தலைமையில் 2023 பெப்ரவரி 25 ஆம் திகதி சனிக்கிழமையன்று இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு நிகழ்வு லண்டனில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய இராச்சியத்தில் உள்ள இலங்கையர்கள் மற்றும் பிரித்தானிய சமூகங்களின் கூட்டு முயற்சியின் மூலம் இலங்கைக்கு ஆதரவளிக்கும் இலக்குடன் உருவாக்கப்பட்ட Midlands Ceylonese and Brits Foundation உடன் இணைந்து இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
‘#SriLankaCan’ என்பது இலங்கையில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும் தீவு நாட்டின் வளர்ச்சித் திட்டங்களை புத்துயிர் பெறுவதற்கும் முன்னாள் கிரிக்கெட் வீரர் தலைமையிலான ஒரு திட்டமாகும்.