54 நாட்களாக ஆழ்கடலில் தத்தளித்த இலங்கை மீனவர்கள் இந்திய கடற்படையால் மீட்பு
54 நாட்களாக அந்தமான் கடலில் தத்தளித்த நான்கு இலங்கை மீனவர்கள் இந்திய கடற்படையால் மீட்கப்பட்டு சென்னை துறைமுகத்துக்கு அழைத்து சென்ற சம்பவம் கடந்த திங்கட்கிழமை பதிவாகியுள்ளது.
இலங்கையின் மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதேசங்களில் இருந்து மீன்பிடிப்பதற்காக படகு ஒன்றில் கடந்த அக்டோபர் மாத ஆரம்பத்தில் சென்ற நான்கு மீனவர்கள் காணாமல் போயிருந்தனர்.
இயந்திர கோளாறு காரணமாக குறித்த மீனவர்கள் 54 நாட்கள் கடலில் தத்தளித்துள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட இலங்கை கடற்தொழிலாளர்களுக்கு உணவு வழங்கி மருத்துவமளித்த கடற்படையினர், அவர்களைச் சென்னை துறைமுகத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.