இலங்கையின் நிதி நிலைமை பெப்ரவரிக்குள் சீராகிவிடும்
இலங்கையின் நிதி நிலைமை பெப்ரவரி மாதத்திற்குள் சீராகி விடுமென முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே நவின் திஸாநாயக்க இதனை தெரிவித்தார்.
இதேவேளை வாக்களிப்பது நாட்டு மக்களின் உரிமை என்பதால், சரியான நேரத்தில் தேர்தல் இடம்பெறுமென்றும் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.
ஆகவே, முழுமையாக ஆராயாமல் ஒரு முடிவுக்கு வராமல் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருப்பதாகவும் கூறினார்.