இலங்கையில் பருப்பின் விலை அதிகரிக்கப்படுகிறது!
இலங்கையில் பருப்பின் விலை எதிர்காலத்தில் அதிகரிப்பதற்கு வாய்ப்புக்கள் உள்ளதாக அத்தியாவசிய உணவுகள் இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது சந்தையில் ஒரு கிலோ பருப்பின் விலையானது 250 ரூபாய் வரை அதிகரித்து உள்ளது.
இலங்கைக்கான பருப்பானது அவுஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
ஆனால் கனடாவில் பருப்பு செய்கை ஆனது பாரியளவில் வீழ்ச்சி அடைந்துள்ளமையால் பருப்பின் விலை அதிகரிப்பதற்கு காரணமாகவுள்ளது.
இதே நிலைமை தொடர்ந்து காணப்படுமானால் பருப்பின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புக்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு அருகே உள்ள ஆழ்கடலில் நிலநடுக்கம்!