தமிழ் அரசின் தலைவரானார் சிறிதரன், 47 வாக்குகளால் வெற்றி!
இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவராக சிவஞானம் சிறிதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கட்சியின் தலைமை போட்டிக்காக சிறிதரன், சுமந்திரன், யோகேஸ்வரன் ஆகியோர் போட்டியிட்ட நிலையில் இடை நடுவில் யோகேஸ்வரன் பின் வாங்கினார்.
தமிழர் தலைநகரான திருமலையில் உள்ள நகர சபை மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடந்த கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் இரகசிய வாக்கெடுப்பு இடம் பெற்றது.
இந்நிலையில் இதன் போது சுமந்திரன் 137 வாக்குகளையும் சிறிதரன் 184 வாக்குகளையும் பெற்றார். 47 வாக்குகள் வித்தியாசத்தில் சிறிதரன் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.