மாண்டோஸ் புயலால், வடக்கில் 600 இற்கு மேற்பட்ட கால் நடைகள் பலி
மாண்டோஸ் புயலால் நிலவிய கடும் குளிர், விடாத மழை, புயல் காற்று ஆகிய சீரற்ற காலநிலை காரணமாக கடந்த இரு நாட்களில் மாத்திரம் வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லை தீவு மாவட்டங்களில் சுமார் 600 இற்கும் அதிகமான கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு 400 கால்நடைகள் வரை உயிரிழக்கும் தருவாயில் உள்ளது.
இதேவேளை மருதங்கேணியில் ஒரு பட்டியில் மாத்திரம் 58 உயர் இன ஆடுகள் கூண்டோடு மரணித்துள்ளன.
எஞ்சிய கால் நடைகளிற்கும் சிகிச்சை அளிப்பதற்கான மருத்துவ பொருட்களைப் பெறுவதில் பெரும் நெருக்கடி நிலவுதாக தெரியவருகிறது.