திடீரென அதிகரித்த தங்கத்தின் விலை
உலக சந்தையில் எரிபொருள் விலை மற்றும் தங்கம் விலை திடீரென அதிகரித்துள்ளது.
ஈரானின் ஒரு பகுதியில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, இன்று (19) காலை நிலவரப்படி, உலக சந்தையில் பிரென்ட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 90 டொலர்களாக உயர்ந்துள்ளதுடன், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையும் 2,400 டொலர்களாக அதிகரித்துள்ளது.