சீனியின் விலையும் அதிகரிக்கிறது?
சீனியின் விலை அதிகரிக்கப்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக கூறப்படுகிறது.
உடன் அமுலாகும் வகையில் சீனி இறக்குமதியினை அரசாங்கம் இடைநிறுத்தி உள்ளதால் சீனியின் விலை அதிகரிக்ககூடிய சாத்தியம் காணப்படுவதாக தெற்கு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சீனி இறக்குமதிக்கு என வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்கள் கடந்த 22ம் திகதி முதல் இடைநிறுத்தப்படுவதாக ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டாளர் அறிவித்துள்ளார்.
இதனால் சுமார் 40 அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொண்ட சீனி இறக்குமதியாளர்களினால் இறக்குமதி செய்யப்படவிருந்த 2 இலட்சம் மெற்றிக் தொன் எடையுடைய சீனி இறக்குமதி இடைநிறுத்தப்படும் என ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டுப் பணியகத்தின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் நிலவி வரும் டொலருக்கான கையிருப்பு பிரச்சினையினால் அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
சீனி இறக்குமதி இடை நிறுத்தப் பட்டதனைத் அடுத்து வெள்ளை மற்றும் சிவப்பு சீனியின் மொத்த விற்பனை விலைகளை சில மொத்த வியாபாரிகள் அதிகரித்துள்ளனர்.
இனி வரும் நாட்களில் சீனியின் சில்லறை விற்பனை விலை உயர்த்தப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக குறித்த தென்னிலங்கை ஊடகம் தெரிவித்துள்ளது.