இடைநிறுத்தப்பட்ட யாழ் ரயில் சேவைகள்!

கொழும்பு மற்றும் காங்ககேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் எதிர்வரும் ஆறு மாதகாலத்திற்கு தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

ரயில்வே மார்க்க திருத்தப் பணிகளுக்காக  இவ்வாறு ரயில் சேவைகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்படவுள்ளது.

வடக்கு ரயில்வே மார்க்கத்திற்கான இரண்டாம் கட்ட திருத்த பணிகள் மாஹோ மற்றும் அனுராதபுரம் ரயில் நிலையங்களுக்கு இடையில் மேற்கொள்ளப்படவுள்ளது.

எதிர்வரும் 7 ஜனவரி 2024 அன்று ஆரம்பிக்கப்படும் திருத்தப் பணிகள் அடுத்து வரும் ஆறு மாத காலத்திற்குள் முடிப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை ரயில் திணைக்களம் கூறியுள்ளது.

குறித்த காலப் பகுதியில் கொழும்பு  கோட்டையில் இருந்து மஹவ புகையிரத நிலையம் வரையிலும் காங்கேசன்துறையிலிருந்து அனுராதபுரம் வரையிலும் மாத்திரமே ரயில்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.