இன பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் பேச்சு விரைவில் ஆரம்பம் – பிரதமர் அறிவிப்பு
தேசிய பிரச்சினைகளுக்கான தீர்வுகள் குறித்து தமிழ், முஸ்லிம் மக்களது பிரதிநிதிகளோடு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்ஹ தலைமையிலான அரசு விரைவில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க உள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் மேலும் தெரிவிக்கையில்,
தேசிய பிரச்சினைகள் தொடர்வதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. குறுகிய காலத்துக்குள் இப்பிரச்சினை தொடர்பில் உரிய தீர்வுகளைக் காண வேண்டும்.
இந்நிலையில் தேசிய பிரச்சினைகள் நீடித்தால் இன, மத நல்லிணக்கம் ஏற்படாது. நாட்டில் ஏதோவொரு வகையில் இனரீதியிலும், மதரீதியிலும் கருத்து மோதல்கள் உருவாகின்றன.
இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களிடத்தில் பிளவுகளை ஏற்படுத்திக் குளிர்காய சிலர் முயற்சிக்கின்றனர்.
தீர்வு விடயம் குறித்து தமிழ், முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளோடு அரசாங்கம் விரைவில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் என்றார்.