ஜனாதிபதியுடனான பேச்சில் உப்பு சப்பில்லை!
வடக்கு, கிழக்கு தமிழ் கட்சிகளுக்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் இன்று இடம்பெற்ற சந்தப்பில் சொல்லிக்கொள்ளதக்கதாக எதுவம் நடந்துவிடவில்லையென தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
வுழமை போன்று தமிழ் மக்கள் பிரச்சினைகளிற்கு குழுக்களை அமைப்பதென்ற ஆலோசனைகளை ரணில் விக்கிரமசிங்க முன்வைத்துள்ளார்.
இதனிடையே சந்திப்புக்கான எவ்வித அழைப்பு தங்களுக்கு கிடைக்கப்பெறவில்லை என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
ஒற்றையாட்சிக்குள் அரசியல் தீர்வு எனும் ஜனாதிபதியின் கொள்கையை கைவிட்டால் மாத்திரமே, தமது கட்சி அரசியல் தீர்வு தொடர்பான ஜனாதிபதியின் கலந்துரையாடலில் பங்கேற்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே அறிவித்தது போன்று சி.வி.விக்கினேஸ்வரன் வழங்கப்பட்ட உறுதி மொழிகள் நிறைவேற்றப்படாத நிலையில் சந்திப்பு பயனற்றதென புறக்கணித்திருந்தார்.
எனினும் அண்மைக்காலமாக வெளியே வந்திராத இரா.சம்பந்தன் தள்ளுவண்டியில் சந்திப்பிற்கு வருகை தந்திருந்தார்.
சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற நிலையில் நல்லிணக்கம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டதாக ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது.
காணி, மீள் குடியமர்த்தல், நல்லிணக்கத்திற்கு அமைவாக சட்டத்தை நடைமுறைப்படுத்தல், தமிழக அகதி முகாம்களில் இருக்கும் இலங்கையரின் பிரச்சினைகள், வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பில் சாத்தியமான கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.