வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி இந்தியா செல்கிறார்
(Tamil News) புதுடில்லியில் 03 மார்ச் 2023 அன்று நடைபெறும் புவிசார் அரசியல் மற்றும் பொருளாதாரம் தொடர்பான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி இந்தியாவுக்கு விஜயம் செய்ய உள்ளார்.
இந்திய வெளியுறவு அமைச்சுடன் இணைந்து அப்சர்வர் ஆராய்ச்சி அறக்கட்டளை இந்த மாநாட்டினை நடத்துகிறது.
இந்த மாநாட்டின் பின் இருதரப்பு கலந்துரையாடல்களுக்காக அமைச்சர் பல நாடுகளைச் சேர்ந்த முக்கியஸ்தர்களையும் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.