வெளிவந்தார் தமிழ் பொது வேட்பாளர்
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளராக தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
சற்று முன் இது குறித்த அறிவிப்பு வெளியானது.
தந்தை செல்வா கலையரங்கில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான தீர்மானம் அறிவிக்கப்பட்டது.
7 தமிழ் கட்சிகளும் 7 சிவில் அமைப்புக்களும் இணைந்து உருவாக்கிய தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் ஊடாக இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொதுவேட்பாளராக களமிறங்குவதற்காக தவராசா மற்றும் பா. அரியநேத்திரன் ஆகியோரின் பெயர்கள் இறுதி பட்டியலில் முன்மொழியப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.