தமிழரசு வவுனியாவில் மீண்டும் கூட்டம்
பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் ஆராய இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய குழுவால் நியமிக்கப்பட்ட நியமனக்குழு வவுனியாவில் இன்று கூடியது.
நவம்பர் 14 இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தமிழரசு கட்சி சார்பில் களத்தில் குதிக்கவுள்ள வேட்பாளர்கள் தொடர்பில் ஆராய்வதற்காக 11 பேர் கொண்ட நியமனக்குழு தமிழரசு கட்சியின் மத்திய குழுவால் நியமிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் களமிறங்கவுள்ள வேட்பாளர்கள் தொடர்பாக நேற்றைய தினம் சனிக்கிழமை கூட்டம் இடம்பெற்றபோதும் இறுதி தீர்மானம் எட்டப்படாத நிலையில் இன்று கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.