அமைச்சரை நோக்கி பாய்ந்த நாய் சுட்டுக்கொலை – யாழில் சம்பவம்
இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதிக்கு தனிப்பட்ட விஜந்த்தினை மேற்கொண்ட போது அவரின் மெய்ப்பாதுகாவலரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி நாய் ஒன்று பலியாகியுள்ளது.
இராஜாங்க அமைச்சர் வல்வெட்டித்துறைக்கு தனது நண்பர் ஒருவரைச் சந்திப்பதற்காக சென்ற போது வளர்ப்பு நாய் ஒன்று லொஹான் ரத்வத்தயைக் கண்டு குரைத்ததோடு மட்டுமல்லாமல் அவரை நோக்கிப் பாய்ந்துள்ளது.
இதன்போது இராஜங்க அமைச்சரினது மெய் பாதுகாவலர் அந்த நாயின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.
துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான குறித்த நாய் பலியாகியுள்ளதாக தெரியவருகிறது.
இராஜாங்க அமைச்சரின் மெய்ப்பாதுகாவலர் இத்துப்பாக்கி சூட்டை நடத்தியமையால் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.