யாழில் குழந்தையை கைவிட்டு கள்ள காதலுடன் ஓடிய குடும்ப பெண்

தனது இரண்டரை வயது குழந்தையை கைவிட்டு , கள்ள காதலனுடன் ஓடிய குடும்ப பெண்ணையும், காதலனையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கணவன் மற்றும் தனது குழந்தையுடன் வசித்து வந்த குடும்ப பெண் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன் தனது காதலுடன் ஊரை ஓடியுள்ளார்.

இது தொடர்பில் கணவனால் யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் பெண்ணையும், அவரது கள்ள காதலானையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் யாழ் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து, இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.