செல்போன் பேசி கரை ஓட்டிய நபரை பிடிக்க முயன்ற காவலருக்கு நேர்ந்த கதி
இந்தியாவிலுள்ள மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் காரில் செல்போன் பேசியபடி சென்ற நபரை பிடிக்க முயன்ற போக்குவரத்து தலைமை காவலர் ஒருவர் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் பானட்டில் இழுத்துச் செல்லப்பட்டார்.
சிவ சிங் சவுகான் என்ற போக்குவரத்து காவலர் சத்யசாய் சந்திப்பில் பணியில் இருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அந்த காரில் இருந்த நபர் அபராதம் செலுத்த மறுத்தது மட்டுமின்றி அங்கிருந்து காரை வேகமாக இயக்கி தப்பி ஓட முயற்சித்துள்ளார்.
இதனை அறிந்த சவுகான் அந்த காரின் முன்பக்கத்தில் தாவி ஏறி நிறுத்த முயற்சித்துள்ளார்.
4 கிலோ மீட்டர் தூரம் பானட்டில் இழுத்துச் சென்ற அந்த நபரை பொலிசார் கைது செய்தனர்.
மேலும் அவரிடம் இருந்து கைத்துப்பாக்கி மற்றும் பிஸ்டல் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.