கிளிநொச்சியில் இளம் பெண்களை மிரட்டிய இளைஞனுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு

கிளிநொச்சி பகுதியில் உள்ள இளம் பெண்கள் பலர், கடந்த சில நாட்களாக ஒரு மர்ம இலக்கிலிருந்து அழைப்புகள் மற்றும் செய்திகளைப் பெறுவதாகக் கூறியுள்ளனர்.
குறிப்பாக “0740612281” என்ற இலக்கத்தில் இருந்து அவர்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அந்தரங்கமான வீடியோக்களை வெளியிட போவதாக, மிரட்டல் விடுக்கப்படுவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

சமூக வலைதளங்களில் இந்த தகவல்கள் பரவத் தொடங்கியதையடுத்து, அந்த இளைஞனின் புகைப்படமும் வெளியான நிலையில், ஒன்லைன் மூலம் பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, கிளிநொச்சி பொலிஸார் விசாரணையை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர். இந்த இலக்கத்துடன் தொடர்புடைய நபர் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், மேலும் பாதிக்கப்பட்டவர்கள் தயங்காமல் முறைப்பாடு செய்யுமாறு பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
				


