பொருளாதாரம் தொடர்பில் ஜனாதிபதியிடம் இருந்து மூன்று முக்கிய செய்திகள்
(LBC தமிழ்) பொருளாதரம் தொடர்பாக அனுராதபுரத்தில் வைத்து ஜனாதிபதியினால் மூன்று முக்கிய அறிவிப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளது.
- 2022 இல் பொருளாதாரத்தின் வளர்ச்சி விகிதம் -11%. இந்த ஆண்டு -3.5 அல்லது -4.0% ஆக இருக்கலாம். ஆனால் 2024ல் இருந்து இந்த பொருளாதாரத்தை நேர்மறையான வளர்ச்சிக்கு கொண்டு செல்வோம். அனுராதபுர காலத்தைப் போன்று யாருக்கும் அடி பணியாத, கடனற்ற வலுவான நாட்டை உருவாக்கி வருகிறோம்.
- அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் பொருளாதார மற்றும் விவசாயத் திட்டமும், IMF திட்டத்தின்படி நாடுகளுடன் மேற்கொள்ளப்படும் கடன் மறுசீரமைப்புத் திட்டமும் எந்த வகையிலும் சீர்குலைந்தால், கடந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதத்தைப் போல நாடு மீண்டும் நெருக்கடியில் விழுவதை யாராலும் தடுக்க முடியாது.
- 2019 ஆம் ஆண்டில், சுமார் 1.6 மில்லியன் வருமான வரி, VAT மற்றும் தேசிய மேம்பாட்டு வரி கோப்புகள் இருந்தன. ஆனால் 2020ல் வழங்கப்பட்ட வரிச் சலுகைகள் காரணமாக 2021 டிசம்பரில் சுமார் 4 இலட்சமாக குறைந்தது. இதனால் அரசாங்க வருமானம் குறைந்தமையே நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு முதன்மைக் காரணம்.