சம்மாந்துறையில் வேகக் கட்டுப்பாடு இழந்த முச்சக்கர வண்டி விபத்து

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரமுனை பகுதியில் இன்று (03) முச்சக்கர வண்டி ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.
சம்மாந்துறை மஜீட்புரத்தைச் சேர்ந்த 26 வயதுடைய சாரதி காயமடைந்த நிலையில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.