மருந்து தட்டுப்பாட்டால் முடங்கிப்போன கண் சிகிச்சை
தற்போதைய மருந்து தட்டுப்பாட்டினால் கண் சிகிச்சை முடங்கி போயுள்ளதாக, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனால், கண் வைத்தியசாலை மற்றும் கண் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படும் சகல வைத்தியசாலைகளிலும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாக மருத்துவ சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் வைத்தியர் பிரசாத் கொழம்பகே கூறுகையில்,
‘கண் வில்லைகளுக்கான தட்டுப்பாடு மற்றும் சத்திர சிகிச்சைக்கு தேவையாக உபகரணங்களின் பற்றாக்குறை காரணமாக கண் சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அரச மருந்து களஞ்சியசாலையிலும் இதற்கான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.
தனியார் துறையிலும் குறித்த பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது’ என கூறினார்.