திலீபனுக்கு தமிழ் பொது வேட்பாளர் அஞ்சலி
நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத்தூபிக்கு மலர் மாலை அணிவித்து தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரன் அஞ்சலி செலுத்தினார்.
நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் நினைவிடத்திற்கு இன்று (27) செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணியளவில் வருகைதந்த பொது வேட்பாளர் நினைவுத்தூபிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
‘பொலிகண்டி முதல் பொத்துவில் வரைக்கும்’ முன்னெடுக்கப்பட்டு வரும் ‘நமக்காக நாம்’ பிரசார பயணத்தின் நான்காவது நாள் பரப்புரை நடவடிக்கை தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தி ஆரம்பிக்கப்பட்டு சாவகச்சேரி, கொடிகாமம், பளை ஊடாக கிளிநொச்சி நோக்கி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பை சேர்ந்த பொ.ஐங்கரநேசன், தமிழரசு கட்சியை சேர்ந்த கலையமுதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.