அந்நியன் படத்தின் ரீமேக் தொடர்பில் சிக்கல்!!

பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்பட்டு வரும் சங்கர், அடுத்ததாக இயக்க இருக்கும் புதிய படத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்து 2005-ல் வெளியான அந்நியன் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து இயக்க உள்ளதாகவும், விக்ரம் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடிப்பார் என்றும் சங்கர் சமீபத்தில் அறிவித்தார். இதற்கு அந்நியன் படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்த படத்தின் கதைக்கான உரிமை தன்னிடம் உள்ளது என்றும், தனது அனுமதி இல்லாமல் ஹிந்தியில் ரீமேக் செய்ய முடியாது என்றும் கூறினார். இதற்கு பதிலளித்த சங்கர், இந்த கதை என்னுடையது. எனவே படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய யாருடைய அனுமதியும் கேட்க தேவை இல்லை” என்றார். பட வேலைகளையும் தொடங்கினார்.

இந்த நிலையில் இந்த படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய இருப்பதாக ஆஸ்கார் ரவிச்சந்திரனும் தற்போது அறிவித்து உள்ளார். ஹிந்தியில்  ரீமேக் ஆகவுள்ள அந்நியன் திரைப்படத்தில் ஹிந்தி மற்றும் ஹாலிவுட் நடிகர்கள் நடிப்பார்கள் என்றும் தெரிவித்து உள்ளார். ஒரே படத்தை இரண்டு பேர் எடுக்க இருப்பதாக அறிவித்திருப்பது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.