துப்பாக்கி சூட்டில் இருவர் பலி
கல்கிசை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வட்டாரப்பல வீதியில் இனம் தெரியாதநபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இன்று (07) அதிகாலை நடத்தப்பட்ட குறித்த துப்பாக்கிச் சூட்டில் 36 மற்றும் 20 வயதுடைய இரு நபர்கள் உயிரிழந்துள்ளதாக கல்கிசை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணமும், துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட நபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையை கல்கிசை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.