யாழில் அதீத போதையுடன் இரு மாணவர்கள் கைது
யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் உள்ள பிரபல பாடசாலையின் இரு மாணவர்கள் அதீத போதையுடன் நேற்று புதன்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாணவர்கள் போதை மாத்திரைகளை உட்கொண்டுள்ளனர் என்பதான தகவல் பொலிஸாரின் விசாரணைகளில் உறுதியாகியுள்ளதுடன், அவர்களுக்கு அவற்றை விநியோகித்த நபர்களை கைது செய்வதற்காக விசாரணைகள் தொடர்கின்றன.
கைது செய்யப்பட்ட இரு மாணவர்களையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர், சிறுவர் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
வாட்ஸ் அப் குழுக்களூடாக மாணவர்களுக்குள் போதை மாத்திரை விநியோகங்கள் நடைபெறுவதாக யாழில் பலர் குற்றச்சாட்டுக்கள் எழுப்பியுள்ளனர்.
இது தொடர்பாக பொலிஸார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, விசாரணைகளை விரைவுபடுத்த வேண்டும் என பல தரப்பினரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.